குலதெய்வத்தை கண்டுபிடிக்க, வழிமுறைகள்

குலதெய்வங்கள் என்றால் என்ன ..?
அவர்களின் பெருமை என்ன...?
குலதெய்வம் விஞ்ஞானத்தோடு எப்படி ஒத்துபோகின்றது...?                                                 குலதெய்வம் தெரியாதவர்கள்                                                  குலதெய்வத்தை கண்டுபிடிக்க, வழிமுறைகள் 
நம் குலத்தினை காக்கும் தெய்வம் குலதெய்வம் ஆகும்.
தெய்வங்களில் மிகவும் வலிமையான தெய்வம் குலதெய்வம் ஆகும்.குலதெய்வமே நமக்கு எளிதில் அருளினை தரும்.மேலும் மற்ற தெய்வ வழிபாடுகளின் பலன்களையும் பெற்று தரும். குலதெய்வம் பெரும்பாலும் சிறுதெய்வமாகவே காணப்படும். சிறு தெய்வம் என்று அலட்சியப் படுத்தக்கூடாது.அதன் சக்தியை அளவிடமுடியாது எமன் கூட ஒருவரின் குலதெய்வத்தின் அனுமதி பெற்று தான் உயிரை எடுக்கமுடியும்.குலதெய்வம் என்பது நமது முன்னோர்களில்தெய்வமாக மாறிவிட்ட புண்ணிய ஆத்மாக்கள் ஆகும்.
அந்த புனித ஆத்மாக்கள் தங்களின் குலத்தினை சார்ந்தவர்களை கண்ணும் கருத்துமாக பேணிக் காக்கும் வல்லமை படைத்தவை.எனவே தான் அந்த தெய்வங்கள் *குலதெய்வங்கள்* என்று சிறப்புடன்அழைக்கப்படுகின்றன.குலதெய்வங்கள் கர்மவினைகளை நீக்க வல்லவை.இன்று நம் வாழ்க்கைப்போக்கு, அதிகபட்சம் இரு பாட்டன், பாட்டி பேருக்கு மேல் தெரியாமல் அல்லவா உள்ளது?
நம் முன்னோர்கள் அதாவது நம் தந்தை வழி பாட்டன், பாட்டிமார்கள் வணங்கி
வந்த தெய்வம் தான் நம் குல தெய்வமாகும்.இந்த தந்தை வழி பாட்டன்மார் வரிசையில், மிகப்பெரியஒழுங்கு ஒன்று இருப்பதை கூர்ந்து கவனித்தால் உணரலாம்.அது ஒரு ரிஷியின் வழி வழிப் பாதை...இது ஒரு முக்கியமான ஒழுங்கு சார்ந்த விஷயமாகும். இதன்படி பார்த்தால், குலதெய்வ சன்னிதியில்  சென்று நாம் நிற்கும் போது, நம் பரம்பரை வரிசையில் போய் நிற்கிறோம்.

இந்த வழி வழி போக்கில் ஒருவர் மூட்டை மூட்டையாக புண்ணியத்தை கட்டியிருக்கலாம்.இன்னொருவர் பாவமே கூட பண்ணியிருக்கட்டுமே! நாம் அங்கே போய் நின்று.அங்கு பிரத்யேகமாக வெளிப்படும் அந்த சக்தியை தொழும் போது, நம் முன்னோர்கள் பித்ருக்களாக இருந்து நம்மை ஆசிர்வாதிக்கிறார்கள்.இது எத்தனை  தூரப்பார்வையோடு,வடிவமைக்கப்பட்ட ஒரு விஷயம்! விஞ்ஞான முறையில் யோசித்தால் ஒரு குழந்தை ஆணா, பெண்ணா என்பதை முடிவு செய்வது ஆணே  ஒவ்வொரு குழந்தைக்கும் 23+23  க்ரொமொசோம்கள் உள்ளன என்பதை அறிவோம்.இது தாய் மூலம் 23, மற்றும் தந்தை மூலம் 23 என்பதையும் அறிவோம்.இதிலே பிறக்கப் போகும் குழந்தை ஆணா, பெண்ணா என்பதைத் தந்தையின் குரோமோ சோமே முடிவு செய்கிறது.

தாயிடம் xx க்ரோமோசோம்கள் மட்டுமே இருக்கின்றன. தந்தைக்கோ, xy என இருவிதமான மாறுபட்ட க்ரோமோசோம்கள் உள்ளன. ஆணின் y யுடன் பெண்ணின் x சேர்ந்தால் ஆண் குழந்தையும் இருவரின் x+x சேர்ந்தால் பெண் குழந்தையும் பிறக்கின்றது என்பதை விஞ்ஞானம் அறுதியிட்டு கூறி உள்ளது. ஆண் குழந்தையை உருவாக்கும் y க்ரோமோசோம் ஆணிடம் மட்டும்
தான் உள்ளது. பெண்ணிற்கு, y க்ரோமோசோம்கள் தந்தை வழி வருவதில்லை.
ஆனால், அதே ஆண் குழந்தைக்கு தந்தையிடம் இருந்து y குரோமோசோம்கள் வருகின்றன. அதனால் அவன் மூலம் வம்சம் மீண்டும் வழி வழியாக வளர்கிறது.வழிவழியாக என்பதில் இருந்தே புரிந்திருக்க வேண்டும், முப்பாட்டனார், பாட்டனார், மகன், பேரன்,கொள்ளுப் பேரன், எள்ளுப் பேரன் எனத்தொடர்ந்து இது ஒவ்வொருவரிடமும் விதைக்கப்பட்டு தொடர்ந்து காப்பாற்றப்பட்டு வருகின்றது.
இதன் முக்கியத்துவம் குறித்து அறிந்தே நம் முன்னோர்கள் ஆண் குழந்தைகளை வாரிசுகளாக்கினார்கள்,பெண் குழந்தைகளை  குல விளக்காக காத்தனர்.பொதுவாக, 13 தலைமுறைக்கு மேல் ஆண் வாரிசு ஏற்பட வாய்ப்பு இல்லை.ஏனெனில், ஆணின் y க்ரோமோசோம்கள் ரொம்பவே பலவீனமான ஒன்று. மேலும், தொடர்ந்து காலம் காலமாக இந்த y
க்ரோமோசோம்கள் அவரவர் பரம்பரை ஆண் மக்களுக்கு சென்று கொண்டிருப்பதால் இன்னமும் பலவீனம் ஆகிக் கொண்டிருக்கிறதாம்.
எனவே, 13 தலைமுறைக்கு மேல் அது வலுவிழந்து பயனற்று போய்விடும்.அதனால் ஏற்கெனவே பலவீனமான y க்ரோமோசோம்கள் மேலும் பலவீனம் அடைய கூடாது என்பதாலும், பரம்பரை நோய்கள் தொடர கூடாது என்பதாலுமே சொந்த ரத்த உறவுகளுக்கிடையே திருமணம் தவிர்க்கப்படுகிறது. பொதுவாக பெண்கள் மட்டும் இரண்டு குல தெய்வங்களை வணங்குபவர்களாக இறைவன் படைத்திருக்கிறான்.
பிறந்த வீட்டில் ஒரு தெய்வம்.புகுந்த வீட்டில் ஒரு தெய்வம். திருமணத்திற்கு முன் பிறந்த வீட்டின் குலதெய்வத்தை வணங்குபவர்கள் திருமணம் முடிந்தவுடன் கணவனின் வீட்டில்  உள்ள குலதெய்வத்தை வணங்க ஆரம்பிக்கிறார்கள்.பெண்கள் திருமணமாகி விட்டால் பிறந்த வீட்டின் குலதெய்வத்தை வணங்குவது கிடையாது. அப்படி இல்லாமல், பிறந்த வீட்டின் குலதெய்வத்தை வழிபடுவது, அவர்களை புகுந்த வீட்டில் எந்த பிரச்சினையும் இல்லாமல் வாழ வழிவகுக்கும்.
இதுவரை யாரும் பிறந்த வீட்டின் குலதெய்வத்திற்கு வழிபாடு செய்யாமல் இருந்தால், பிறந்த வீட்டின் குலதெய்வத்திற்கு திருவிழாகாலங்களில் வழிப்பாட்டை மேற்கொள்ளுங்கள்.
ஒருவரது குலம் ஆல்போல் தழைத்து, அருகுபோல வேரூன்ற வேண்டுமனால் குலதெய்வ வழிபாடு மிக, மிக முக்கியம். குலதெய்வதோஷம் இருந்தால், மற்ற தெய்வங்களின்  அருள் கிடைக்காது. குலதெய்வத்தின் அனுமதி அல்லது அனுகிரகம் இல்லை என்றால் ஒருவர் என்னதான் சக்தி வாய்ந்த ஹோமம், யாகம் செய்தாலும், ஆலயங்களுக்கு சென்றாலும் எதிர்பார்த்த பலன் தருமா என்பது சந்தேகம்தான். எனவே உங்கள் குலதெய்வத்தின் கோவிலுக்கு அடிக்கடி(குறைந்தது வருடம் ஒரு முறையாவது) செல்லுங்கள்.
அபிஷேக ஆராதனைகள் செய்யுங்கள். அனைத்து நலன்களும் பெற்றிடுங்கள்.                                        குலதெய்வத்தைக் கண்டறிந்து வரவழைக்க
நிறையபேர் தங்களுடைய குலதெய்வம் எது என்று எந்த விவரமும் அறியாமல் உள்ளதாகவும், கடந்த மூன்று தலைமுறைகளாகவே குலதெய்வ வழிபாடு விட்டுப் போனதாகவும் சொல்வார்கள். ஏன் இப்படி? 
குல தெய்வத்தை அவர்கள் நிந்தனை செய்தோ அல்லது பங்காளிகளோடு சொத்துத் தகராறிலோ, ஊரைவிட்டு காலி செய்துகொண்டு போனபின் தெய்வத்தை அடியோடு மறந்து போனதோ, தெய்வமே கொடுத்த வம்ச சாபத்தால் பீடிக்கபட்டதாலோ, வீட்டு பெரியவர்களை/ வீட்டிற்கு வந்த மருமகளை பழிதீர்த்துக் கொண்ட காரணத்தினாலோ ஒவ்வொரு குடும்பத்திலும் அக் குலதெய்வம் அந்தந்த சந்ததிகளுக்கு தான் புலப்படாமல் இருக்குமாறு திரையைப் போட்டு வைக்கும். எத்தனைக் காலத்திற்கு? நூறாண்டுகளையும் கடக்கலாம்.  அதுவரை மூன்று தலைமுறைகளுக்கு எல்லா கஷ்டங்களும் தோஷங்களும் கோர தாண்டவம் ஆடி முடிந்திருக்கும். குல தெய்வத்தை சாந்தப் படுத்தி வீட்டிற்கு வரவழைக்கும் வரை இன்னல்களைச் சொல்லி மாளாது. உங்கள் ஜாதகத்தில் என்னதான் 100% யோகங்கள் இருந்தாலும் ஒன்றும் வேலை செய்யாது.
வளர்பிறை வெள்ளிக்கிழமை
வளர்பிறை வெள்ளிக்கிழமை அதிகாலை பிரம்ம முஹூர்த்தம் நேரத்தில் குடும்பத் தலைவரோ/தலைவியோ குளித்து முடித்து ஒரு புதிய சிவப்பு சதுரத் துணியில்: விரளி மஞ்சள் ஒன்று, சாம்பிராணி சிறிதளவு, கரித்துண்டு ஒன்று, சந்தனம் துண்டு /தூள், குங்குமம், விபூதி சிறிதளவு கொட்டி அந்தத் துணியை மடித்து முடிச்சாகக் கட்டி, தூபதீபம் காட்டி, வீட்டின் வாசக்கால் உள்பகுதியின் மேல்  தலையில் இடிக்காதவாறு சுவற்றில் ஆணி அடித்து அதில் கட்டித் தொங்க விடவும். தினமும் விளக்கு வைக்கும் நேரத்தில் வீட்டைப் பெருக்கவோ, தலையில் பேன் பார்க்கவோ, தலைமுடியை வாருவதோ, வாசக்காலில் உட்காருவதோ, தீய சொற்கள் பேசுவதோ கூடாது 
தொடர்ந்து ஏழு வெள்ளிக் கிழமைகள் பூ/பழம் நிவேதனம் வைத்து வழிபடவும். நிறைவேறும்வரை மாமிசம் உண்ணக்கூடாது. தெய்வத்தின் தரிசனத்திற்கு இந்தத் தாமதம் ஏனோ? வம்ச பாவ இருளில் இருந்த அந்த சந்ததியினரின் வினைகள் தீரும்வரை தரிசன பிராப்தம் கிடைக்காமல் இருக்கும் என்பது விதி.
வழிபாட்டு முறைகள்
ஒவ்வொரு வெள்ளிக் கிழமையிலும் வாசக் காலில் கட்டிய முடிச்சுக்கு தூபம்/ ஊதுவத்தி காட்டவும். தினமும் தெய்வத்திற்கு காலை/மாலை விளக்கு ஏற்றும்போது “எம் குலதெய்வமே எங்கு கோயில் கொண்டுள்ளாய் என்பதைக் காட்டி விடு. வீட்டிற்கு வந்து அருளாசிகள் தா” என்று உளமார வேண்டிக் கொள்ளுங்கள். கனவிலோ/ நினைவிலோ/ எப்படியோ யார் மூலமாகவோ குலதெய்வம் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளும். ஒரு வார காலத்தில் சில நல்ல விஷயங்கள் தங்களது குடும்பத்தில் நடைபெறத் துவங்கும். தன்னை வெளிப்படுத்திக் கொண்டதும் அத்தலத்திற்குச் சென்று அபிஷேகம், பூ, பழம், வஸ்திரம், தங்கம்/வெள்ளி காணிக்கைத் தந்து, பொங்கல் வைத்து வணங்கி சரண் அடையுங்கள். பிறகு வருடாவருடம் போய் வழிபடுங்கள். 
அதன்பிறகு தடைகள் எல்லாம் நீங்கி எல்லாமே அதிசயமாக நடக்கும். அப்படி வெளிப்பட்டவுடன் அந்த தெய்வத்தை ஆராதியுங்கள். தியான வழிபாட்டில் நீங்கள் கூப்பிட்ட போதெல்லாம் உங்களிடம் வந்து ஆசிர்வதித்துவிட்டுப் போவார்.
 குலதெய்வத்தை கண்டுபிடிக்க, வழிமுறைகள்                                                                 
நம்மில் ஏராளமானோருக்கு அவரவர் குலதெய்வம் என்ன, எங்கு இருக்கின்றது என்பது பற்றியும், அவரை வீட்டிற்கு அல்லது வாழுகின்ற இடத்திற்கு வரவழைக்கும் முறை என்ன என்பது தெரியாது. அதனால் எளிமையான, அனுபவப்பூர்வமான முறையை விளக்கியுள்ளோம். பயன்படுத்தி குலதெய்வத்தின் அருள் பெருக
1.நீங்கள் வாழக்கூடிய ஊரில் உள்ள சிவன் கோவிலுக்குச் சென்று விநாயகர்,ஒன்பது கோள்கள், பலிபீடம், கொடிமரம், நந்தி தேவர் இவர்களுக்கு ஒரு நெய் விளக்கு ஏற்றி வணங்கவும்.
2. சிவபெருமானுக்கு அவர் பெயருக்கே ஒரு அர்ச்சனை செய்யவும். பூசை செய்கின்ற குருக்களிடம் 11 ரூபாய் பணத்தை கொடுத்து சிவபெருமான் பாதத்தில் வைக்கச் சொல்லுங்கள்.
3. ” ஐயா சிவபெருமானே (தாத்தா பெயர்) அவர்களின் பேரனும், (அப்பா பெயர்) அவர்களின் புதல்வனுமாகிய (உங்கள் பெயர்) அடியேனுக்கு என்னுடைய குலதெய்வம் யார் என்பதும் அவர் எங்கு இருகின்ற்றர் என்பதும் தெரியவில்லை. என் சார்பிலும் என் வம்சாவளியின் சார்பிலும் இந்தக் கோரிக்கையையும், காணிக்கையையும் பெற்றுக்கொண்டு என் குலதெய்வம் என் வீட்டிற்கு வரவும், எங்களுக்கு அருளாசிகள் வழங்கவும், எங்களை காத்துக்கொள்ளவும் அருளிடுக” என்று மனமுருகி வேண்டிக்கொள்க.
4. உங்கள் ஊரில் நல்ல செயல்பாட்டில் உள்ள முனீசுவரர், காளியம்மன், கருப்பர் கோவிலுக்குச் சென்று அவர்களையும் மேற்சொன்னது போலவே வணங்க வேண்டும்.
5. உங்கள் ஊரில் ஊர்த்தெய்வமாக இருக்கும் (உதாரணம்: மதுரை- மீனாட்சி அம்மன், காஞ்சி- காமாட்சி, காரைக்குடி- முத்தாலம்மன், சென்னை- சென்னியம்மன், பட்டுக்கோட்டை- நாடியம்மன், திருச்சி- உறையூர் வெக்காளியம்மன்) தெய்வத்தையும் மேற்சொன்ன முறையில் வணங்க வேண்டும்.
6. உங்கள் வீட்டில் எந்தவிதமான எதிர்மறை சக்திகளை வணங்குபவர்களிடமிருந்து வாங்கிய எந்திரங்கள், தகடுகள், தாயத்துகள், எலுமிச்சை பழம், மை… போன்ற எந்த ஒரு பொருள் இருந்தாலும் அதை எல்லாம் அகற்றி எரித்து விடவும்.
7. அருவி நீர், ஊற்று நீர், கோவில் கிணற்று நீர் போன்ற ஏதாவது புனித தீர்த்தத்தை கொண்டு வீட்டை சுத்தம் செய்து குங்கிலியம், நாய்க்கடுகு, வெண்கடுகு, மருதாணி விதை, மிளகு முதலியவைகளை அரைத்து செய்யப்பட்ட சாம்பிராணி புகை காட்டவும்.
8. வீட்டு வாசலில் மஞ்சள் நீர் தெளித்து அழகான கோலம் போடவும். வீட்டு வாசலில் ஒரு எலுமிச்சை பழத்தை நறுக்கி குங்குமம் தடவி நிலையின் இருபுறமும் வைக்க வேண்டும்.
9. அன்றைய இரவு ஐந்து முகங்கள் கொண்ட குத்து விளக்கை சுத்தமான நல்லெண்ணெய், பசுவின் நெய் கொண்டு நிரப்பி, 5 திரிகள் இட்டு அலங்கரித்து வைக்கவும். குத்து விளக்கின் இருபுறமும் ஒரு எலுமிச்சை பழத்தை நறுக்கி குங்குமம் தடவி வைக்க வேண்டும்.
10. குத்து விளக்கின் முன்புறம் ஒரு தலைவாழை இலையில் நீங்கள் விரும்பி உண்ணும் உணவுகளை படையலாக இடவும். வாழைப்பழம், வெற்றிலை பாக்கு வைக்கவும். இந்த வெற்றிலை பாக்கில் சுண்ணாம்பு தடவி வைக்க வேண்டியது கட்டாயம்.
11. இலையில் 2 லட்டுகள் வைக்கவும், ஒரு சொம்பில் மஞ்சள் நீர், ஒரு சொம்பில் பானக்கம், ஒரு சொம்பில் பால், ஒரு சொம்பில் குடிநீர் வைக்கவும். kulatheivam kandupidika
12. குளித்துவிட்டு மஞ்சள், சிவப்பு, வெள்ளை, நீலம், பச்சை வண்ணங்களில் உள்ள உடையை அணிந்து கொள்ளவும். கறுப்பு கூடவேகூடாது. விபூதி, மஞ்சள், குங்குமம், நெற்றியில் முறைப்படி பூசிக்கொள்ள வேண்டும்.
13. பெண்களும் இதுபோல் தயாரான பின்பு கையில் ஆரத்தி தட்டு எடுத்துக் கொண்டு வாசலுக்கு செல்ல வேண்டும். ஆண்கள் கையில் ஒரு எலுமிச்சை பழத்தை நறுக்கி குங்குமம் தடவி, வாசலில் வாசலின் வெளிப்புறத்தை நோக்கியவாறு நின்று கொண்டு ” எங்களுடைய குலதெய்வம் எங்கிருந்தாலும், எங்கள் மீது ஏதேனும் குற்றம் குறை இருந்தால் மன்னித்து ஏற்றுக்கொண்டு, அனைத்து கட்டுக்களையும் அறுத்துக் கொண்டு, எழுச்சி பெற்று, செழுச்சி பெற்று, எங்களையும் எங்கள் வம்சாவழிகளையும் காக்க எழுந்தருள்க” என்று சொல்லி பழத்தை பிழிந்து விடவும்.
14. வாசலின் முன் புறத்தில் 3 சூடங்களை ஏற்றி “எல்லோரும் வருக” என்று சொல்லி ஆரத்தி, கற்பூர தீபம் காட்டவும். அப்படியே சூடத்தட்டோடு குத்துவிளக்கின் முன்பாகச் சென்று அமர்ந்து குத்து விளக்கை ஏற்றவும்.
15. கருப்பர்களில் மூத்தவரான பதினெட்டாம்படிக் கருப்பரை மனதில் நினைத்துக் கொள்ளவும். அவரையே குருவாக நினைத்து கீழ்க்கண்ட குரு வாசகத்தை 24 நிமிடங்கள் மனமுருகச் சொல்லுங்கள்.
ஓம் குரு வாழ்க; ஓம் குருவே துணை;ஓம் குருவே எல்லாம்;
ஓம் குருவே அனைத்தும்; ஓம் குருவே சரணம்.
“தாத்தா பதினெட்டாம்படிக் கருப்பர் அவர்களே (தாத்தா பெயர்) அவர்களின் பேரனும், (அப்பா பெயர்) அவர்களின் புதல்வனுமாகிய (உங்கள் பெயர்) அடியேனுக்கு என்னுடைய குலதெய்வம் யார் என்பதும் அவர் எங்கு இருகின்றார் என்பதும் தெரியவில்லை. நீங்களே என் குலத்திற்குரிய தெய்வத்தை இந்தப் பூசையின் மூலமாக வலிமை பெற்று, வளம் பெற்று, புத்துயிர் பெற்று, மீண்டும் ஆட்சி பீடத்தில் அமரச் செய்து அருளாட்சி செய்யச் செய்திடல் வேண்டும்.
என் சார்பிலும் என் வம்சாவளியின் சார்பிலும் இந்தக் கோரிக்கையை பெற்றுக்கொண்டு என் குலதெய்வம் என் வீட்டிற்க்கு வரவும், எங்களுக்கு அருளாசிகள் வழங்கவும், எங்களை காத்துக்கொள்ளவும் அருளிடுக”
ஓம் குரு வாழ்க; ஓம் குருவே துணை;ஓம் குருவே எல்லாம்;
ஓம் குருவே அனைத்தும்; ஓம் குருவே சரணம்.
16, பூசையின் முடிவில் வணங்கப்பட்ட தெய்வங்கள் அனைவருக்கும் படைத்தது வைத்து இருக்கும் படையலை காணிக்கையாக்கி தூப தீபம் காட்டி பூசையை நிறைவு செய்யவும். அனைத்து தெய்வங்களுக்கும் நன்றி சொல்லுங்கள்.kulatheivam
17. பூசையின் முதல் நாளன்றே உங்கள் குலதெய்வம் உங்களைத்தேடி வந்துவிடும். நம்பிக்கையோடு 48 நாட்கள் இதே பூசையை செய்யும்போது உங்கள் குலதெய்வம் எப்படி இருந்தாலும் எங்கு இருந்தாலும் வந்துவிடுவது உறுதி.
18. 7 தலைமுறையாக வராத குலதெய்வம் இந்தப்பூசையால் அவர்களை தேடி வந்தது. நம்பிக்கையோடு செய்யுங்கள். கூடிய விரைவில் குலதெய்வத்தின் அருள் உங்களுக்கு கிடைக்கும்  எப்போது வழிபடுவது?
கிராம கோவில் திருவிழா மற்றும் முக்கிய பண்டிகை திருவிழா நாட்களிலும், குல தெய்வ சிறப்பு பூஜைகளை ஒன்றாக இணைத்து செய்வதுண்டு குடும்பத்தில் நடை பெறும் பிறந்த நாள் விழா, காதணி விழா, பூப்புனித நீராட்டு விழா, திருமண விழா போன்ற விசேச நாட்களில் குலதெய்வத்திற்கு முதல் அழைப்பிதழ் வைக்கும் பழக்கம் இருக்கிறது.
திருமண நிச்சயம் குலதெய்வத்தின் முன்பு நடக்கும் வழக்கமும் சில இடங்களில் இருக்கிறது. வருடத்திற்கு ஒரு முறை சுற்றமும், கோவில் பங்காளிகளும் ஒன்றாக இணைந்து ஆட்டு கிடாவெட்டி பொங்கல் வைத்து விழாவை போல சிறப்பாக வழிபாடு செய் கின்றார்கள்.
வழிபாடு பலன்கள்
குலதெய்வம் வழிபாட்டின் மூலம் மணமாகதவர்களுக்கு திருமணம் நடைபெறும். குழந்தை வரம் பெறுவது, தீராத நோய்களுக்கு பரிகாரம் பெறுவது, கல்வி, தொழில் விருத்தி கிடைப்பது, வழக்குகளில் நீதி கிடைப்பது முதலிய பயன்கள் பெறப்படுகிறது.
அடிப்படையில் இந்துமதம் பற்றற்ற தன்மையை போதிக்கிறது, அதாவது அனைத்தையும் துறந்து தியானம், தவம் மூலம் இறை நிலையை அடைவது. ஆனால் இந்த குலதெய்வம் மனிதன் லௌகீக வாழ்க்கைக்கு தேவையான பலன்களையே அளிக்கிறது.
திருச்செந்தூர் முருகக்கடவுளே குலதெய்வம்
பெற்றோர்கள் சொல்லாத காரணத்தாலும், இடம் பெயர்ந்து விட்ட காரணத்தாலும் பலர், தங்களது குலதெய்வம் எது என்று தெரியாமல் தவிப்பார்கள். ஜோதிடர்கள் அதற்கு பரிகாரங்கள் கூறி இருந்தாலும் நாம் வணங்குவது, உண்மையிலேயே நம் குல தெய்வம்தானா என்ற நெருடல் சிலருக்கு இருந்து கொண்டே இருக்கும்.
இப்படி தவிப்புக்குள்ளாகி இருப்பவர்கள் வீணாக கவலைப்பட வேண்டியதில்லை. திருச்செந்தூர் முருகனை குல தெய்வமாக மனதில் ஏற்றுக் கொண்டு வழிபாடு செய்தால் போதும். நிச்சயம் பலன்கள் கிடைக்கும்.
பகவத் கீதை தரும் விளக்கம்
குல தெய்வ வழிபாடு பற்றி பகவத் கீதையில் கூறப்பட்டுள்ள விளக்கம் வருமாறு: யார் என்னை எப்படி வழிபடுகிறார்களோ அவர்களை அப்படியே நான் வழி நடத்துகிறேன், செயல்களின் பயனை விரும்புபவர்கள் இங்கே தேவதைகளை வழிபடுகிறார்கள். அதாவது இறைவனை லட்சியமாகக் கொள்வதும் உலக இன்பங்களை ஒதுக்கி விட்டு இறை நெறியில் செல்வதும் எல்லோராலும் முடியாது.
உலகம் மற்றும் அதன் இன்பங்கள் வேண்டும் என்று நினைப்பவர்களுக்காக இறைவன் தேவதைகளைப் படைத்துள்ளார் அல்லது அவரே அப்படி அவதரிக்கிறார். வேத காலத்தில் இந்திரன், வருணன் முதலிய தேவர்கள் வழிபடப்பட்டனர். இக்காலத்தில் உள்ள தேவதைகள் தான் குல தெய்வங்கள். எனவே குலதேவதையை ஒருவர் முறையாக வழிபட்டாலே உலக இன்பங்களைப் பெற்றுக்கொண்டே இறை நிலை அடையும் வாய்ப்பு உள்ளது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக